சிருங்கேரி

ர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் சிருங்கேரியில் அமைந்துள்ள சங்கர மடம் மூழ்கி உள்ளது.

கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர் ஆதி சங்கராச்சாரியார். இவர் சிறு வயதில் துறவறம் பூண்டார். இவர் சிவபெருமானின் அவதாரம் எனப் போற்றப்படுகிறார் இவர்  இந்து மதத்தைப் பரப்ப இந்தியாவில் நான்கு மடங்களை அமைத்தார். அதில் ஒன்று கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடம் ஆகும். இந்த மடம் சாரதா பீடம் என வழங்கப்படுகிறது.

இந்த மடம் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு  ஆதி சங்கராச்சாரியாரால் அமைக்கப்பட்டதாகும். இந்த மடம் துங்கா நதிக்கரையில் இயற்கை எழில் மிகுந்த ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்துக்களின் குறிப்பாக சைவர்களின் புண்ணிய தலங்களில் ஒன்றாகும்.

தற்போது பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் பல  பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. துங்கா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் காரணமாக சிருங்கேரி சாரதா பீடமான சங்கர மடம் மூழ்கி உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சிருங்கேரியில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.