போபால்: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்துள்ள மத்திய பிரதேச மாநில அரசு. அதன்படி, மே 1 முதல் ஜூன் 19ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது.
மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் எதிர்பாராத வெப்பநிலை உயர்வு காரணமாக மாணவர்களின் உடல்நிலையில் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு 19.06.2019 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என அம்மாநில அமைச்சர் இந்தர் சிங் பர்மர் தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் கோடை வெயிலையொட்டி, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கோடை காலம் வந்தாலே, மாணவர்கள் பள்ளி சென்று வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மாணவச் செல்வங்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், கோடை காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வழக்கமான கோடை காலத்தைவிட மிகவும் கடுமையாக இருப்பதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளிகளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மே 1-ம் தேதி தொடங்கும் விடுமுறை ஜூன்19-ம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்களுக்கு மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை விடுமுறை நாளாகும். இந்த நாட்களில் ஆசிரியர்கள் யாரும் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை.
ஜூன் 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.