சமோவா, ஆஸ்திரேலியா
தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கடல் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென் பசிபிக் கடலில் கண்டப்பாறைகள் நகர்வு அடிக்கடி ஏற்படுவதால் இவை ஒன்றையொன்று உரசுவதும் ஒன்றின் அடியில் ஒன்ரு சிக்கிக் கொள்வதும் அடிக்கடி நடைபெறுகிறது. இவ்வாறு கடந்த 2018ல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் நில நடுக்கத்தால் சுனாமி உருவாகி சுமார் 4300 பேர் உயிர் இழந்தது நினைவிருக்கலாம். இதைப்போல் 2004 ல் நிலநடுக்கத்துக்குப் பிறகு உருவான சுனாமியில் 2.2 லட்சம் பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வகையில் இன்று அதிகாலை 1.20 மணிக்குத் தென் பசிபிக் கடல் அடியில் சுமார் 10 கிமீ ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் நிகழ்ந்த இந்த பூகம்பம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள்து. சுனாமி அலைகள் சுமார் 03. மீ முதல் 1 மீட்டர் வரை எழும்பும் என ஆஸ்திரேலியா அரசால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து நியூஜிலாந்து அரசும் மக்கள் சுனாமி காரணமாக கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சுனாமி ஆஸ்திரேலியாவின் சமோவா, குக் தீவுகளில் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதைப் போல் நியூசிலாந்தில் வடக்கு தீவின் வடக்குப்பகுதிகள், தி கிரேட் பேரியர் தீவு, கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.