டில்லி
கொரோனா அறிகுறிகள் இருந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.
பாஜக தலைவர்களில் சம்பித் பாதரா குறிப்பிடத்தக்கவர் ஆவார். கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் உள்ள அவர் பல ஊடக நிகழ்வுகளில் கலந்துக் கொள்வார் எனவே அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயம் உண்டு. இவர் வீர சாவர்க்கர் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு பலரையும் கவர்ந்து இருந்தது.
இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது அதையொட்டி இவர குருகிராமில் உள்ள மேதாந்தா என்னும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பித் பாத்ராவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவருடைய உடல் நலம் தேற பிரார்த்தனை செய்து பல பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களைல் பதிவு இட்டுள்ளனர். பாஜக தலைவர்களில் ஒருவரான அமித் மாளவியா, “ எனது நண்பர் ச்ம்பித் அவர்களுடன் நான் பேசினேன். அவர் நோயைப் போராடும் நல்ல திறனுடன் உள்ளார்” என பதிந்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவும் வாழ்த்தி டிவிட் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜா, “எனது நண்பர் சம்பித் விரைவில் குணம் அடைந்து முழு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன். பத்திரமாக இருங்கள் சகோதரரே, நீங்கள் விரைவில் முழு குணமடைவீர்கள்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.