விதவிதமான தற்கொலைகள்.. .. டாக்டர்களையும் மிரள வைக்கும் கொரோனா…
குஜராத்தில் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான ரித்தி சவ்டா. கனடா யுனிவர்சிடியில் படிப்பதை லட்சியமாக நினைத்திருந்தார் அவர். இந்த கொரோனா தொற்றும், அதைத் தொடர்ந்த உலகளாவிய ஊரடங்கும் தனது கனவை நிறைவேற்றத் தடையாகி விட்டன என்று தவறாக முடிவு செய்து மன உளைச்சலால், கடைசியில் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். இவ்வளவிற்கும் இவர் இப்பகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏவின் மகள்.
இவர் மட்டுமல்ல. இன்னும் நிறையப் பேர் இந்த கொரோனா ஊரடங்கினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோர், பணியிழந்தோர், அடுத்துச் செய்வதறியாது ஆங்காங்கே இதைப் போன்ற தவறான முடிவுகளை எடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களில் தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ கொரோனா தொற்று உள்ளது என்பதை அறிய வந்தவர்களும் அடக்கம்.
வியாழனன்று, குர்கானில் 54 வயது வயதான ஒருவர், இவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது அறிந்து தற்கொலை செய்து இறந்திருக்கிறார். மேலும், கான்பூரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் இந்த கொரோனா தொற்று இருப்பதைத் தெரிந்து கொண்டு சானிட்டைசரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று இப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இன்னமும் இவர்களைப் போல எத்தனையோ பேர் இந்த கொரோனா மற்றும் அதனைச் சார்ந்த காரணங்களால் இதைப் போன்ற தீவிரமான முடிவுகளைத் தேட முயல்வது பெரும் கவலையளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
இந்த கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட சில அரசு மருத்துவர்களே உயிர் பயத்தால் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த கொரோனா மன ரீதியாகவும் பலரை வதைத்து வருவதையே இவைகள் காட்டுகின்றன.
கொரோனா பீதியால் மிரண்டுபோயுள்ளர்வகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சையே இப்போதைக்கு முதல் தேவை
-லெட்சுமி பிரியா