டில்லி

ந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு வரும் மே மாதம் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.    நாட்டில் தொழிலகங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரபல பொருளாதார நிபுண்மரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜனுடன் வீடியோ காலில் உரையாடி உள்ளார்.

அப்போது ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு ரகுராம் ராஜன் பதில் அளித்தார்.  ரகுராம் ராஜன் தனது பதிலில், “ஊரடங்குக்கு பிறகு மக்களால் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது.  பணி இடங்கள், போக்குவரத்து குறிப்பாக பொதுப் போக்குவரத்தில் சமூக இடைவெளி  எவ்வாறு சாத்தியமாகும்?

இதனால் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் ஒருமுறை ஊரடங்கை அமல் படுத்தினால் முதல் முறை அமல்படுத்தியது தோல்வி அடைந்துள்ளதாக அர்த்தம்  ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துள்ள போது மீண்டும் அமல்படுத்டினார்ல் அது நம்பத்தன்மையை மிகவும் குறைக்கும்  கொரொனா நோய்த் தொற்றை முழுமையாகக் குறைக்க முடியாவிட்டாலும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.

அமெரிக்காவில் தற்போது தினசரி சுமார் 1.5 லட்சம் கொரொனா பரிசோதனை நடக்கிறது.  இதைத் தினசரி 5 லட்சம் ஆகும் நடவடிக்கையில் அமெரிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்தியாஇவ்ல் தற்போது தினசரி 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே நடக்கின்றன.  இதை 2 லட்சமாக அதிகரிக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலையில் இன்னும் 4 மாதங்களுக்கு உதவித் தொகை பெறுவோர், பணி அற்றோர், வாழ வழி இல்லாதோருக்கு நிதி உதவி அளித்தாக வேண்டும்.  அத்துடன் பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவு அல்லது உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும்.   இதற்கு சுமார் 65000 கோடி தேவைபடும்க்.  நம் நாட்டின் ஜிடிபி ரூ. 200 லட்சம் கோடி என்னும் போது அதில் ரூ.65000 கோடி என்பது பெரிய தொகை இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.