டில்லி

ச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன

கொரோனா வைரஸ் தாக்கம்  உச்சநீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை.

நோய் தொற்றியவர்கள், தொற்றாதவர்கள் என அனைத்து தரப்பினரும், தங்களைத் தனிமை படுத்திவரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளும், அதே போன்ற பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள உள்ளனர்.

கணொலி காட்சி மூலம் வழக்கை விசாரணை செய்யும்  நடைமுறையை இன்று முதல் உச்சநீதிமன்றம் அமல் படுத்துகிறது.

இன்று இரு வழக்குகளை இவ்விதமாக நீதிபதிகள் விசாரிக்கிறார்கள்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.கோப்டேவும், நீதிபதி டி.ஒய்.சந்திர சூட்டும் அடங்கிய அமர்வு, தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் அமர்ந்து இருப்பார்கள்.

அவர்கள் மேஜையில் வீடியோ மானிட்டர்கள் இருக்கும்.

கொஞ்ச தூரத்தில் உள்ள ( நீதிபதிகள் அறையிலிருந்து 100 மீட்டர் தூரம்) மற்றொரு அறையில் வழக்கறிஞர்கள் இருப்பார்கள்.

அங்கும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

காணொலி காட்சி மூலம் வழக்கறிஞர்கள்- நீதிபதிகள் இடையே விவாதங்கள் நடக்கும்.

இந்த பரீட்சார்த்த முறைக்கான ஏற்பாடுகளை நீதிமன்ற அலுவலர்கள் கச்சிதமாகச் செய்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்,