ம்மு

ரிமையாளரைச் சுமந்து மாவட்டம் விட்டு மாவட்டம் வந்த ஒரு குதிரை ஜம்மு வில் தனிமை படுத்தபட்டுளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றில் ஜம்மு காஷ்மீர் யுனியன் பிரதேசத்தில் 1921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  இங்கு இதுவரை 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   இங்கு 10 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  இங்கிருந்து மற்ற மாவட்டங்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்றுச் செல்லவேண்டும்.

சிவப்பு மண்டலத்தில் உள்ள சோபியான் மாவட்டத்திலிருந்து ஒருவர் ஜம்மு வில் உள்ள ரஜோரி பகுதிக்குத் தனது குதிரையில் சவாரி செய்து வந்துள்ளார்.   இவர் முன் அனுமதி பெறாமல் வந்துள்ளார்.  திங்கள் இரவு கிளம்பிய அவர் முகல் சாலை வழியாக ரஜோரி வந்துள்ளார்.   அங்கு நிலவி வரும் கடும் குளிர் மற்றும் இரவு நேரம் என்பதால் வழியில் சோதனைகள் நடைபெறவில்லை.

ஆனால் அவர் ரஜோரி எல்லையை அடைந்ததும் அவரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ரஜோரி பகுதி பச்சை மண்டலத்தில் இருந்ததால் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்த பயணியையும் குதிரையையும் கொரோனா பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். குதிரை உரிமையாளர் தனிமை வார்டில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் குதிரைக்கான பரிசோதனை அறிக்கை வரும் வரையில் குதிரையையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.  அதன்படி உரிமையாளரின் குடும்பத்தினர் குதிரைக்கு பாலிதீன் கவரால் மாஸ்க் போட்டு லாடத்தில் தனிமைப்படுத்தி உள்ளனர்.