சென்னை

மிழக இந்து அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில் சொத்துக்களின் வாடகை வருமானம் உயர்நீதிமன்ற தலையிட்டால் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 99%க்கும் மேற்பட்ட கோவில்கள் தமிழக இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.   இந்த கோவில்களின் ஏராளமான சொத்துக்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.   அவற்றின் வாடகைகள் வெகு நாட்களாக மாற்றி அமைக்கப்படாமல் உள்ளன.   இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வந்தது.

இது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.   மேலும் சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வாடகைகள் தற்காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.   சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தலையிட்டால்  தமிழக இந்து அறநிலையத் துறை புதிய வாடகை விகிதங்களை கணக்கிட்டு அறிவித்தது.

அத்துடன் சர்வே நடத்தப்பட்டு கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களை அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.  அந்த சொத்துக்களும் தற்போது புதிய வாடகை விகிதப்படி வாடகைக்கு அளிக்கப்பட்டுள்ளன.   இதனால் தற்போது கோவில் சொத்துக்களின் வாடகை வருமானம் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளதாக இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

சென்னை நகரில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் ரூ1 கோடியில் இருந்து ரூ.2.54 கோடியாக அதிகரித்துள்ளது.  மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் ரூ. 1.39 கோடியும், ஜார்ஜ் டவுனில் உள்ள காளிகாம்பாள் கோவில் சொத்துக்கள் வாடகை வருமானம் ரூ.1.19 கோடியும் அதிகரித்துள்ளன.