விருதுநகர்

ருத்தடை செய்த பெண் மறுபடியும் கர்ப்பம் ஆனதால் விருதுநகர் ஆட்சியருக்கு இழப்பீடு  அளிக்க நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நான்கு குழந்தைகளின் தாயான ராக்கி என்ற பெண், ‘’இதுவே போதும்’’ என்ற முடிவுக்கு வந்து- விருதுநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில்  கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ஆனால் மூன்று மாதத்தில் மீண்டும் தான் கர்ப்பம் அடைந்ததால் அவருக்குப் பயங்கர அதிர்ச்சி.

கருத்தடையில் அரசு மருத்துவமனை காட்டிய அலட்சியமே எனக் கோபமடைந்த அவர். தனக்கு நஷ்டஈடு தர வேண்டும்’’ எனச் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் கதவைத் தட்டினார்,.

அவரது மனுவை ஏற்று வழக்கை  விசாரித்த நீதிமன்றம் மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த கோளாறு நடந்திருப்பதைக் கண்டறிந்தது.

ராக்கியின் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவரது 4 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்க விருதுநகர்  மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

மதுரையில் தற்போது வசிக்கும் ராக்கியின் கணவருக்கு  தற்காலிகமாக ஏதாவது அரசு வேலை வழங்க ஆவன செய்யுமாறும் மதுரை ஆட்சியரை பணித்துள்ளது, உயர்நீதிமன்றம்.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டும் என்பது இது தானோ?

–  ஏழுமலை வெங்கடேசன்