ஊரடங்கால், குடிகாரர்கள் சேமித்த ரூ. 2, 500 கோடி?
’ டாஸ்மாக்’ நிறுவனத்தை ’பொன் முட்டையிடும் வாத்து’’ என்று அதிகார வர்க்கத்தினர் வர்ணிப்பார்கள்.
அரசுக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும் காமதேனு, கற்பக விருட்சம் என்ற பட்டப்பெயர்களும் உண்டு.
ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 5 ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை இன்று திறப்பதாக இருந்தார்கள்.
ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால், ஏப்ரல் முழுவதும் சரக்கு கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும்.
(போகிற போக்கைப் பார்த்தால் ‘ஏப்ரல்,மே யில பசுமையே இல்ல ..காய்ஞ்சு போச்சுடா’’ என்று குடிமகன்கள் பாடும் சூழல் உருவாகக்கூடும்)
இதனால், குடிகாரர்களைக் காட்டிலும், ’டாஸ்மாக்’ நிர்வாகம் தான் அதிக சோகத்தில் உள்ளது.
சரக்கு கடைகள் திறக்கப்படாததால், டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு , 90 கோடி ரூபாய் நஷ்டம்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், மொத்த வருவாய் இழப்பு- 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்
ஊரடங்கு, உத்தரவால், தமிழகம் முழுவதும் உள்ள குடிமக்கள், 2,500 கோடி ரூபாயை ,தண்ணீரில் கரைக்காமல் சேமித்து வைத்துள்ளனர், என்றும் கூறலாம்.
– ஏழுமலை வெங்கடேசன்