விக்கிரவாண்டி
நாளை விக்க்ரவாண்டியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்ததால், நாளை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்த போதிலும், தி.மு.க., பா.ம.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இங்குள்ள 2 லட்சத்து 34 ஆயிரத்தி 178 வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 276 ஓட்டுச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி துவங்கிய தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. கடந்த 25 நாட்களாக முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசியல் கட்சியினர் நேற்று மாலை 6:00 மணிக்கு பிறகு தொகுதியில் இருந்து வெளியேறினர்.
விழுப்புரம் ஆட்சியர்
”விழுப்புரம் மற்றும் அருகாமை மாவட்டங்களில் அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் விக்கிரவாண்டி தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
அதேபோல் இத்தொகுதியை சேர்ந்த பிற மாவட்ட கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும்.
விக்ரவாண்டி தொகுதியை தவிர்த்த மாவட்டத்தில் பிற தொகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்
எனத் தெரிவித்துள்ளார்.