சென்னை-

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ள இன்று கடைசி நாள் என்பதால் ரிசர்வ் வங்கிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பிரதமர்  மோடி கடந்த நவம்பர் 8 ம் தேதி உயர் பணமதிப்பு நோட்டுகளான 500, 1000 ரூபாய்களை புழக்கத்திலிருந்து தடை விதித்தார். பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய்களை டிசம்பர் 31 ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் அதன்பிறகு ரிசர்வ் வங்கிகளில் மாற்றக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து மார்ச் 31 ம் தேதி வரை வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என மாற்றி அறிவித்த து. இந்நிலையில், மத்திய அரசின் கெடு இன்று முடிவதால்  டில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் ரிசர்வ் வங்கி கிளைகளில் பணத்தை மாற்ற கூட்டம் அலைமோதுகிறது.

தடை செய்யப்பட்ட  பழைய ரூபாய் நோட்டுகளை இன்று மாற்ற தவறினால் நாளை முதல்  அந்த பணத்தாள்கள்   முதல் பொட்டலம் கட்டத்தான் பயன்படும்.