துபாய்,
துபாயில் உள்ள 84 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றும் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சேத விவரம் குறித்து எந்தவித தகவல்களும் வரவில்லை.
துபாயில் உள்ள பிரபல 84 அடுக்குமாடி கட்டிடமான டார்ச் டவரில் இன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் 9வது மாடியில் தீ பிடித்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 9வது மாடியில் இருந்து பிற தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.
கடந்த 2011ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டிடத்தில், ஏற்கனவே 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.