துபாய்: துபாயில் உள்ள 67 மாடிகளைக்கொண்ட மெரினா கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இருந்து சுமார் 3800 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அங்கு உடனடியாக குளிரூட்டும் பணி தொடங்கியது. இதனால் தீ பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும் தீயணைப்பு துறையினர் உள்பட பேரிடர் மீட்பு படையினர் விரைந்து பணியாற்றி சுமார் 6மணி நேரம் போராடி தீ யை கட்டுப்படுத்தினார்.
இந்த கட்டித்தில் 764 குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருந்தவர்கள், பத்திரமாக மீட்கப்படடதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குடியிருப்பு கட்டடத்தில் 764 வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு தற்காலிக வீடுகளை வழங்க, கட்டிடத்தின் மேம்பாட்டாளருடன் தொடர்புடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து வருகின்றனர். வெளியேற்றப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விரிவான சுகாதார மற்றும் உளவியல் ஆதரவை வழங்க ஆம்புலன்ஸ் குழுக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.