சென்னை: சென்னையில் போதை பொருள் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது. வீடுகளுக்கே நேரடியாக சென்று போதை பொருளை டோர் டெலிவரி செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-
சென்னையில் பைக்கில் சென்று போதை பொருள் சப்ளை செய்த நான்கு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே திமுக முன்னாள் உறுப்பினர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்மூலம் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், போதை பொருள் விற்பனை சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்களிலும் கொடிகட்டி பறக்கிறது.
சென்னையில் பள்ளி, கல்லூரி அருகே, காவல்வாய் ஓரங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் போதை பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. இது அந்தந்த பகுதி காவல்துறையினருக்கு தெரிந்தும், போதை பொருள் விற்பனையும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த ரவுடிகள் ஈடுபட்டு வருவதால், அவர்களை கைது செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது. இதனால், போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துகாணப்படுகிறது.
இதுதொடர்பாக தொடர் புகாரின் பேரில்தான் அவ்வப்போது போதை பொருள் சப்ளை செய்பவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். சமீபத்தில், கொடுங்கையூர் பகுதியில் போதை பொருள் தயாரித்து வந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சில பகுதிகளில் போதை விற்பனை செய்தவர்களை இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வடசென்னையில் முக்கிய பகுதியான வியாசர்பாடி, கொடுங்கையூர், புளியந்தோப்பு, ஓட்டேரி, எழும்பூர், சென்ட்ரல், மண்ணனி, திருவான்மியூர், ஈசிஆர் என பகுதிகளில் போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் போதைப் பொருள் விற்பதாக ரகசிய தகவல் போலீசருக்கு கிடைத்த நிலையில், அங்கு வாகன சோதனை நடைபெற்று வந்தன. அப்போது பைக்கில் வந்த நான்கு இளைஞர்களை போலீசார் மடக்கி பிரித்து பரிசோதனை செய்தபோது, அவர்களிடம் போதைப் பொருள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்களை கைது செய்த காவல்துறையினர், அவரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று போத பொருள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 50 கிராம் எடையுள்ள போதைப் பொருள், ஐபோன், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூறய போலீசார் , சென்னையில் போதைப் பொருள் நெட்வொர்க் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்றும், போதைப் பொருளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். அந்த வகையில், நான்கு பேரை போதைப் பொருள் வழக்கில் கைது செய்துள்ளதாகவும், போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடை செய்வதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், காவல்துறையும் கூறி வந்தாலும், நாளுக்கு நாள் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதுதான் உண்மை நிலவரம். இதை இரும்புகரம் கொண்டு ஒடுக்கவில்லை என்றால், தற்போதைய தலைமுறையினர் டாஸ்மாக் அடிமையாகி கிடப்பதுபோல, வருங்கால தலைமுறை போதை மாத்திரைக்கும், போதை ஊசிகளுக்கும் மயங்கி கிடப்பார்கள் என்பதை மறுக்க முடியாது-..
விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார் என்பதைபோல பெற்றோர்களும், தங்களது குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து போதை பொருள் அருகே செல்லாதவாறு பாதுகாத்துக்கொள்வது நல்லது.
சென்னையில் ஜோராக நடைபெறும் போதைபொருள் விற்பனை: ஒரு வாரத்தில் 40 பேர் கைது….
போதைபொருள் நடமாட்டம் அதிகரிப்பு: வழக்குகளை சிபிஐக்கு மாற்றப்போவதாக நீதிமன்றம் எச்சரிக்கை…