சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் கார்னர் பகுதியில் பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட போதை பொருள் விற்பனை செய்துவந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருள் உபயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கோவியல் இளம் மாணவி ஒருவர் 3 பேர் கொண்டபோதை கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைபொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அப்போது, பாரிஸ் கார்னர் மற்றும் மன்னடி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தவலைக்கொணடு, அந்த பகுதியில் திடீர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அபபோது, ‘சென்னை மண்ணடியில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அந்த கும்பலை சுற்றி வளைத்த போலீசார் அவர்களை கூண்டோடு கைது செய்தனர். இவர்களில் 2 பெண்கள் உள்பட 8 பேர் இருந்தனர். அவர்களிடம் இருந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் போதை பொருள் விற்பனை கும்பலுக்கு தலைவராக இருந்து செயல்பட்டது முகமது சாலிக் என்பதும், அவரை கைது செய்து, நடத்திய விசாரணையில், அவர் கொடுத்த தகவலின்பேரில் மண்ணடி மற்றும் ஏழுகிணறு பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்படி, ஏழுகினரை சேர்ந்த அசரப்பலி அதேபோல் ராயபுரத்தை சேர்ந்த பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி லைலா பதானியா அவரது மகள் சாமினா மற்றும் சாமினாவின் காதலன் முகமது யாசின் உட்பட 8 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கும்பல், போதை பொருள் கேட்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று விற்பனை செய்துவந்ததும், சென்னை முழுவதும் பெரிய நெட்ஒர்க் அமைத்து கல்வி நிலையங்கள், தனியார் நட்சத்திர விடுதிகளில், பார்ட்டிகள் பகுதிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் 8 பேரை மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…
https://patrikai.com/the-dmk-regime-is-a-distres-regime-tamil-nadu-become-a-drug-producing-state-edappadi-palaniswami-strongly-criticized/