மும்பை :

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, இந்தி திரை உலகில் போதைப்பொருள் பயன்பாடு பெருமளவில் இருப்பதாக தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பையில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை அன்று மும்பையின் அந்தேரி உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் பெரோஸ் நாடியாத்வாலா இல்லத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

“அவரது வீட்டில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என மண்டல போதைப்பொருள் தடுப்பு. பிரிவு இயக்குநர் சமீர் வான்கடே தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது தயாரிப்பாளர் பெரோஸ் வீட்டில் இருந்த அவரது மனைவி ஷாபனா சயீத் கைது செய்யப்பட்டார்.

பெரோஸ் நாடியாத்வாலா, இந்தியில் வெற்றி பெற்ற WELCOME, PHIR HERY PHERI உள்ளிட்ட சினிமாக்களை தயாரித்துள்ளார்.

– பா. பாரதி