சென்னை: கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை செய்ததாக சென்னையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தாலும் நீரழிவு போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். இதை கட்டுப்படுத்த ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில், சென்னை தாம்பரம் அருகே கள்ள சந்தையில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.மருந்து விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த சரவணன் என்பவர் முதலில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியார் மருத்துவமனைகள், மருந்தகத்தில் பணியாற்றிய மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.