போதை மருந்து கடத்தல் தொடர்பாக நிமிர்ந்து நில் பட நடிகை ராகினி திவேதி யை பெங்களுரில் போலீசார் கைது செய் தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


ஆப்பிரிகாவை சேர்ந்த கடத்தல் நபர்  மூலமாக போதை மருந்து கடத்தப்பட்டு விஐபி பார்ட்டிகளில் விநியோகிக்கப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் கைதான நடிகை ராகினி திவேதி பா ஜ கட்சியை சேர்ந்தவர், கடந்த 2019 தேர் தலில் அக்கட்சிக்காக பிரசாரம் செய்தார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது அத்துடன் அவர் பாஜவுக்காக பிரசாரம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபற்றி கர்நாடக மாநில பாஜக மாநில அமைப்பாளர் ஏ.எச் ஆனந்த். இணை அமைப்பாளர் பி.என் ராகவேந் திரா ஆகியோர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்.’கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்வேறு நடிகர், நடிகைகள் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்தனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகினி. அவர் பாஜக உறுப்பினர் அல்ல. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார். அவருடைய சொந்த பிரச்சனைகளில் பாஜக தலையிடாது. அதுமட்டுமின்றி இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களுக்கு எப்போதும் பாஜக ஆதரவு தருவதில்லை. ராகினி திவேதியை காப்பாற்றும் முயற்சியோ, அவருக்கு ஆதரவாகவோ பாஜக ஈடுபடாது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.