மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் போதுமான அளவு மருந்து ஆய்வாளர்களை பணி அமர்த்தப்படவில்லை என கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டி உள்ளது.

மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை குறித்து கணக்கு தணிக்கைத் துறை ஒரு அறிக்கையை அளித்துள்ளது.   அந்த அறிக்கை நேற்று மகாராஷ்டிர சட்டப்பேரவையில் அளிக்கப்பட்டது.   அதில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ”மருந்துகள் துறையில் ஆய்வாளர்களுக்கான பணியிடங்கள் 37% நிரப்படாமல் உள்ளன.   அவற்றுக்கு  புதிய பணியாளர்களை பணி அமர்த்தாமல்  மருந்துகள் துறையின் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள்ன.    பல இடங்களில் துணை ஆணையர்கள் மருந்து ஆய்வாளர்களாகவும் ஒரு சில மருந்து ஆய்வாளர்கள் துணை ஆணையர்களாகவும்கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

தற்போது உரிமம் ரத்து செய்யப்பட்ட 1533 மருந்து விற்பனையகங்கள் மீண்டும் மருந்துகளை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.   இது பொதுமக்கள் உடல்நலத்துக்கு மிகவும் அபாயம் உண்டாக்கும்.   சில இடங்களில் மருந்து விற்பனையகங்கள் பரிசோதனை செய்யப்படாமலே உரிமங்கள் புதுப்பிக்கப் பட்டுள்ளன.

மாநில அரசு இது போன்ற விவகாரங்களில் அவ்வப்போது சோதனை நடத்துவது மிகவும் அவசியமாகும்.    மேலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் உடனடியாக ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும்.   புதிய ஊழியர்களை பணி அமர்த்துவது முதலில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.   மாநிலம் முழுவதும் உணவு மற்றும் மருந்துகளுக்கான சோதனைச் சாலைகளை அதிகரிக்க வேண்டும்”  என குறிப்பிடப்பட்டுள்ளது.