மொகாலி

ஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிக்ரம் சிங் மஜிதியா மீது போதைப் பொருள் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

வரும் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்றாகும்.   இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கி உள்ளன.   இவ்வாறு பணியைத் தொடங்கி உள்ள கட்சிகளில் சிரோமணி அகாலி தளம் கட்சியும் ஒன்றாகு.

சிரோமணி அகாலிதளத் தலைவர்களில் ஒருவரான பிக்ரம் சிங் மஜிதியா என்பவர் பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் ஆவார்.   மேலும் இவர் முன்னாள் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோரின் உறவினர் ஆவார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜகதீஷ் போலா என்பவர் கைது செய்யப்பட்டார்.   இந்த வழக்கு விசாரணையில் பிக்ரம் சிங் பெயரும் அடிபட்டதால் கடும் சர்ச்சை எழுந்தது  இந்த வழக்கு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டதால் அப்போது சர்ச்சை ஓய்ந்தது. தற்போது அதே வழக்கில் பிக்ரம் சிங் பெயரும்  சேர்க்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மொகாலியில் உள்ள மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் பிக்ரம் சிங் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.   அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.   இது சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்குப் பின்னடைவை அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]