சென்னை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த பகுதிகளாக
- புதுக்கோட்டை – ஆவுடையார்கோவில், மணமேல்குடி.
- சிவகங்கை – தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை.
- ராமநாதபுரம் – போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை.
- தென்காசி – ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்
- தூத்துக்குடி – ஆள்வார்திருநகரி.
- விருதுநகர் – நரிக்குடி, திருச்சுழி ஆகிய மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.