சென்னை
நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் வருவதையொட்டி மே நான்காம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார்..
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானலுக்குச் செல்கிறார். நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்று மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்குச் செல்கிறார்.
அவர் மே 4-ந் தேதி வரை அவர் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் மலைப்பகுதி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏப் ரல்29 முதல் மே 4-ஆம் தேதிவரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.