சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடந்த ஓராண்டில் மட்டுமே விமானம், துறைமுகம் வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள், டிரோன்கள் மற்றும் சட்ட விரோத பொருட்கள்,   வெளிநாடுகளில் இருந்து விமானங்கள், கப்பல்கள்மூலம் சட்ட விரோதமாக கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

துபாய், அரபு அமீரகம்,  சிங்கப்பூர்  என பல நாடுகளில் இருந்து,  கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  சென்னை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் தடை செய்யப்பட்ட பொம்மைகள், டிரோன்கள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட ரூ.26.4 கோடி மதிப்பிலான பொருட்கள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து,   வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் கன்டெய்னர்களை, சுங்கத் துறை அதிகாரிகள் கடுமையாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும்,  சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைள் அதிகரித்து வருவதால், டிரோன்கள் உள்பட சில சிட்டவிரோத பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி,   வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சீன டிரோன்கள் கடத்தல் அதிகரித்துள்ளது என்றும்,  கடந்த ஓராண்டில் மட்டுமே விமானம், துறைமுகம் வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட 200 டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு டிரோன்கள் கடத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.