சென்னை

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் குப்பை வாகனங்களை ஓட்டுநர் உரிமம் இன்றி இயக்க தடை விதித்துள்ளது.

சென்னை நகரில் பேட்டரி  மூலம் இயக்கப்படும் குப்பை வாகனம் மோடி ஒரு சிறுமி காயம் அடைந்தது மிகவும் பேசு பொருளானது.  இதையொட்டி சென்னை மாந்கராட்சி மீது காயம் அடைந்த சிறுமியின் தந்தை இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் சென்னையில் குப்பை வாகனம் மோதி காயமடைந்த சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில், காயமடைந்த சிறுமிக்கு ரூ.1.78 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விபத்துக்கு மாநகராட்சி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் குப்பை வாகனம் இயக்க கூடாது என்று தெரிவித்துள்ள தீர்ப்பாயம், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் 3 சக்கர பேட்டரி குப்பை வாகனத்தை இயக்குவது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளது.