சென்னை:
சென்னையில் பிரபலமாக உள்ள வாடகை கார் சேவையை செய்துவரும் ஓலோகேப் நிறுவன அலுவலகத்தை ஓட்டுனர்கள் முற்றுகையிட்டுள்ளார்கள்.
சென்னையில் பிரபலமாக செயல்படும் ஓலோகேப் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஓட்டுனர்கள் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஓலோகேப் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளார்கள்.
பணி நேர வரையறை, உரிய கமிசன் உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடக்கிறது. தற்போது ஓலா நிறுவன மேலாளரிடம் பேச்சி வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.