சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது ‘செல்போன்’ பேச தடை விதித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் பணியாளர்கள் விஷயத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, தரமற்ற ஓட்டல்களில் பேருந்துகள் நிறுத்துவதை தடுத்து நிறுத்தி, தரமான உணவகங்களில் நிறுத்தும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு பயணிகள் இடைய பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், பணியின் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் செல்போன் பேச தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்த உத்தரவுகளை  மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.