சென்னை: சென்னையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 3 முதல் 6 மணி வரை இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை டுத்து வருகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சாந்தோம் கடற்கரை டூ பூந்தமல்லி பணிமனை வரையிலான ரயில் பாதையிகள் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இதையடுத்து, பொதுமக்களின் நலன் கருதி, பூந்தமல்லி முதல் போரூர் வரை 9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான தண்டவாள பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில் இயக்குவதற்கான சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மெட்ரோ ரயில் சேவையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை இயக்கப்பட உள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் ஏற்கெனவே மார்ச் 20ஆம் தேதி 2.5 கி.மீ. தூரத்திற்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோதனை ஓட்டம் நடக்கிறது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.