மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திரிஷ்யம் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் தொடர்ச்சியாக திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் 2-ஆம் பாகம் தெலுங்கில் உருவாகியுள்ளது.

தெலுங்கில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். மீனா, நதியா, எஸ்தர் அனில் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு த்ரிஷியம் 2 படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 25 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளதாக நடிகர் வெங்கடேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.