கமதாபாத்

து விலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில் 5 வருடங்களில் மது அருந்தும்  பெண்களின் எண்ணிக்கை இருமடங்காகி ஆண்கள் எண்ணிக்கை பாதி ஆகி உள்ளது.

காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் தொடர்ந்து மது விலக்கு அமலில் உள்ளது.   அதே வேளையில் இந்த மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனையும் அதிக அளவில் நடைபெறுகிறது.  அடிக்கடி மது வகைகள் விற்பனை நடப்பதும் அதை விற்பவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.  இந்நிலையில் இந்த மாநிலத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு ஒன்று நடந்துள்ளது,

அந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் மது அருந்தும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த 2015 ஆம் வருடம் 10.6% ஆக இருந்துள்ளது.  அது 2020 ஆம் வருடம் 4.6% ஆகக் குறைந்துள்ளது,.  அதே வேளையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை 0.4% லிருந்து 0.8% ஆக உயர்ந்துள்ளது.  அதாவது 5 வருடங்களில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது.

இது குறித்து சமூகவியலர் கவுரங் ஜானி, “மக்களில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தோரிடம் மது அருந்தும் பழக்கம் வெகுநாட்களாக உள்ளது.   அந்த இனத்தை சேர்ந்தோர் ஆண்களும் பெண்களும் இணைந்து அமர்ந்து மது அருந்துவது அவர்களது பழக்கமாகும்.  குறிப்பாகப் பழங்குடியினரிடையே இந்த பழக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் மிகச் சிலரிடையே மது அருந்தும் வழக்கம் ஒரு குற்றமாகப் பார்க்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  இதற்கு காரணம் குஜராத் மாநிலத்தைப் பொறுத்த வரை இது ஒரு குற்றம் எனக் கருதப்படுவதால் பலரும் தனது வழக்கத்தை வெளியே சொல்வதில்லை என்பதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.  அதே வேளையில் மாநிலத்தில் மது அருந்தும் பர்மிட் வாங்குவோர் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்து வருவதையும், அவர் தெரிவித்துள்ளார்.