டெல்லி: இந்த முறை காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய பட்ஜெட்டை வரும் பிப்வரி 1ம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இந் நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று எதிரொலியாக இம்முறை காகிதத்தை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து வரும் பட்ஜெட் காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இனி காகிதத்திற்கு பதில் மென்பிரதியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதே போல இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சி இருக்காது என்றும் மத்திய நிதியமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.