டில்லி

குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர் பாட்டிலின் அளவு 1 லிட்டரிலிருந்து அரை லிட்டராகக் குறைக்கப்பட்டது

தற்போது நாடெங்கும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இனிமேல் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளுக்குத் தேவைப்பட்டால், கூடுதலாக மற்றொரு 500 மி.லி. தண்ணீர் பாட்டிலைப் பணம் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே குடிநீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் 1லிட்டர் தண்ணீர் பாட்டிலிலிருந்து அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் நீண்ட தூரம் பயணங்கள் மேற்கொள்ளவில்லை என்பதாலும் தண்ணீர் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ced