சென்னை
சென்னை ந்கரின் சில பகுதிக்ச்ளில் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
”சென்னையில் மெட்ரோ ரெயில் நிறுவன பணிக்காக (CMRL) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
அதாவதுதேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்வதால் 29.03.2025 அன்று காலை 10.00 மணி முதல் 30.03.2025 அன்று காலை 10.00 மணி வரை, மண்டலம் 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.