குடிகார்ரகளே.. இந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தைக் கேளுங்கள்!

Must read

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  அருகே சிக்கப்பட்டு கிராமத்தில் வசிக்கும் முருகப்பன்-கெளரி தம்பதி. நான்கு  வருடங்களுக்கு முன் இவர்களுக்கு  திருமணம் நடைபெற்றது.

முருகப்பன் பெரும் குடிகாரார். தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்.  இதனால் திருமணமான ஆறே மாதத்தில் தம்பதி  பிரிந்துவிட்டனர்.  பிரிந்த நிலையில், 1 வருட காலம் ஆனதால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர்.

தீர்ப்பு வரும் நிலையில் முருகப்பன், தனது மனைவியிடம், சேர்ந்து வாழ விரும்புவதாகவும், எனவே வழக்கை வாபஸ் பெறுமாறும் தெரிவித்தார். இதற்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்து, வழக்கை வாபஸ் பெற்றனர்.

மனைவியுடன் நீடாமங்கலத்தில் 3 மாதம் முருகப்பன் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் மீண்டும் குடித்து விட்டு தினமும் அடித்துக் கொடுமைப்படுத்தினார். இதனால்  மனமுடைந்த கெளரி, வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

தற்கொலை செய்து கொள்ளும் முன்,  தனது செல்போனில், “கணவர் கொடுமைப்படுத்தியதால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று , கெளரி வீடியோ பதிவு செய்துள்ளார். தனது குழந்தையை, பெற்றோர் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும், கண்ணீருடன் உருக்கமாக கெளரி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குடி குடியைக் கெடுக்கும் என்பது எத்தனை சத்தியமான வார்த்தை!

 

(வீடியோ நன்றி: நியூஸ் 7)

 

 

 

More articles

Latest article