Skip to content
  • Sat. Sep 26th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

குடி மகன்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக்…

May 15, 2020
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடைக்கு தடை விதித்ததுடன், டாஸ்மாக் கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது.
வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம்,  ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை.
எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும்,   மதுவாங்க வருவோர், ஆதார் கொண்டு வர வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளயும் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட  வேண்டுமே தவிர, நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் கடுமையாக கருத்து தெரிவித்து உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 நாட்களும், ஒவ்வொரு வண்ணங்களில் ஆன 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

Post navigation

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா…
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள ராயபுரம் பகுதிக்கு தனி திட்டம்… ராதாகிருஷ்ணன்ராதாகிருஷ்ணன்

Related Post

தமிழ் நாடு

வீரமணி POCSO வழக்கு: “TRP-யைவிட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்கள் உள்ளன” வீடியோக்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer