சேலம்:
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் மூடலுக்கு பிறகு இன்றுகடை திறக்கப்படுவதைத் தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை குடிமகன்கள் வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர்.
ஆனால், சேலத்தில், மதுப்பிரியர்கள், சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நெரித்துக் கொண்டு வரிசையில் வந்து மது வாங்கிச் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து 40 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பல இடங்களில் குடி மகன்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் மதுக்களை வாங்கிச் சென்றனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் 216 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஆனால், இன்று 163 கடைகள் மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டன. இதையடுத்த, அங்கு குடி மக்கள் கூட்டம் அலைமோதியது.
பல டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்கள் கொரோனா தொற்று குறித்து கவலைப்படா மல், ஒருவொருக்கொருவர், முண்டியடித்தும், நெருங்கி நின்றபடியும் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். அங்கு பாதுகாப்புக்குச் சென்ற காவல்துறையினர் வலியுறுத்தியும் அதை மதிக்காமல் மதுவாங்கிச் சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.