ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக இந்திப்பட ரசிகர்கள் மனதில் கோலோச்சியவர் ஹேமமாலினி. இவரது மகள் இஷா தியோல்.
இந்திப்படங்களோடு, தமிழ்ப்படமான ஆயுத எழுத்து படத்திலும் நடித்தவர். இவர், தனது காதலரான பரத் தக்தனி என்ற மும்பை தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவர்களது குழந்தையுடன் ஹேமமாலினி இருக்கும் படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அழகுப்பாட்டி போல அழகு பேத்தி என்று வாழ்த்துகிறார்கள் நெட்டிசன்கள்.