பாலசோர்:
ஒடிசாவின் பாலசோர் பகுதியில், தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆகாஷ்- 1எஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை இரண்டாவது முறையாக வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
தரையில் இருந்து விண்ணில் இருக்கும் இலக்கை தாக்கும், ஆகாஷ் 1எஸ் என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாறுபட்ட தொழில்நுட்ப முறைகளும் நாட்டை காக்கவும் வகையில் இந்தியா செயல்பாட்டு வருகின்றது
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இணைந்து ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வரும் இந்த ஏவுகணைகள், தரைமட்டத்தில் இருந்து 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும் விமானத்தை கூட தாக்கும் வல்லமை கொண்டவை.
30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை கூட ஏவுகணை தாக்கி அழிக்கும். எதிரி நாட்டு ஏவுகணைகளையும் எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமை கொண்ட ஆகாஷ் 1எஸ் ஏவுகணை மேம்படுத்த நிலையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் 2 வது முறையாக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அயல் நாட்டு படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊருவிடுவினாலும், இந்தியா ஆகாஷ் 1 எஸ் ஏவுகணை மூலம் இலக்குகளை துல்லியமாக அழித்து விடும் ஆற்றல் கொண்டது.