சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் நலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.