திராவிட மாடல் ஆட்சி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆளுநர் ஆர். என். ரவிக்கு பதிலடி கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது என்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

அரசின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் மாற்றுக் கருத்து கூறுவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சமீப நாட்களாக முழுமூச்சாக மேற்கொண்டு வருகிறார்.

திராவிட மாடல் கொள்கைக்கு எதிரான ஆளுநரின் இந்தப் பேச்சு திராவிட கொள்கையில் பிடிப்புள்ள அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் :

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது

திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அடையாளமும், முகவரியும் கிடைக்கும் என்று திமுக மீது அவதூறு பரப்புவோர் இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.