சென்னை: பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் வடிகால் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் அமைச்சர் டி.ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சனம் சய்துள்ளது.
திமுக எம்.பி வில்சன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பேசிய வார்த்தைகள், திமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் செய்து வரும் ஸ்டாலின் அரசு, முறையாக அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், குண்டும் குழியுமாக பணிகளை மேற்கொள்வதால் மழை நீர் முறையாக வெளியேறுவதற்கு போதிய வசதி இல்லாமல் தேங்கிக் கிடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பருவமழை தொடங்கும் நேரத்தில் வடிகால்வாய் பணிகளை மேற்கொள்வது அறிவுள்ள அரசாங்கத்துக்கு சான்றா? என டி.ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிகவின் மதுஒழிப்பு மாநாடு குறித்து கூறியவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுகவினர் கலந்து கொள்வது, ஜீவகாருண்ய மாநாட்டில் கசாப்பு கடைக்காரன் கலந்து கொண்டது போல இருப்பதாக விமர்சித்தார்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி தொடர்பான வழக்கு ஒன்றில் ஆஜரான திமுக எம்பி வில்சன் பேசிய பேச்சு, ஜனநாயக நாட்டில் நீதிமன்றம், பத்திரிக்கை என எதுவும் இல்லாதது போல் இருப்பதாகவும், இது திமுகவினருக்கு அழிவை நோக்கிச் செல்லக்கூடிய காலம் என்று கண்டனம் தெரிவித்ததுடன், “அராஜகத்தின் உச்சக்கட்டமாக திமுக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், கருணாநிதி முதல் தற்போதைய திமுக எம்.பி வில்சன் வரை நீதிமன்றத்தை அவமதித்துப் பேசுவது வாடிக்கையாக உள்ளது. இது திமுகவினருக்கு புதிதான ஒன்று அல்ல என்றும் விமர்சித்தார்.
இந்த ஆண்டும் வெள்ளத்தில் தத்தளிக்குமா சென்னை….? 36 படகுகளுடன் சென்னை மாநகராட்சி தயார்…