ஆனால், மத்தியஅரசு நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 22 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்படவில்லை. அதற்கான காலஅவகாசமும் கோரவில்லை.
இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் டோங்கட் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அரசியலமைப்பின் 8-வது அட்டவணைப்படி பிற மொழிகளிலும் அறிக்கை வெளியிடப்பட்டால் அது திறம்பட பரவுவதற்கு உதவியாக இருக்கும் என்றும், மொழிபெயர்ப்புக்கு மாநில அரசின் உதவியையும் கோரலாம் என்றும், இந்த மொழிபெயர்ப்புகள் மத்திய, மாநில சுற்றுச்சூழல் அமைச்சகங்களின் வலைத்தளங் களில் 10 நாட்களுக்குள் வெளியிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.