ஜெனிவா,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதனை உலக சுகாதார அமைப்பு நியமனம் செய்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த சவுமியா சுவாமிநாதன்,  சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (டெல்லி) தலைமை இயக்குனராகவும் சவுமியா சுவாமிநாதன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு திட்டங்கள் துறையின் இணை தலைவராக டாக்டர் சவுமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்தியாவில்  பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய  புகழ்பெற்ற இந்திய மரபுசார்ந்த தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் (92) மகள் என்பது குறிப்பிடத்தக்கது.