டில்லி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ட்விட்கள் ஆழமாகவும் ரசிக்க வைக்கும்படியும் இருக்கும். ஆனால் கடந்த 17ம் தேதி அவர் ட்விட்டிய பதிவு, அன்புமணிக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

டில்லி செய்தியாளர்கள் பற்றி, “செய்தியாளருக்கு செய்திக்கு பதில் ரூ 1700 மதிப்பு உணவும், அதிக விலை பேக்கும் தந்தால் ஊடகங்களில் ஜால்ரா சத்தம் கேட்காமல் கண்டன குரலா ஒலிக்கும்” என்று ஜூலை 17ம் தேதி ட்விட்டனார் ராமதாஸ்.

அப்போது அவரது மகனும், பா.ம.க.வின் இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் டில்லியில் இருந்தார்.

இந்த ட்விட் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் ஆட்சேபம் தெரிவித்தனர். அதற்கு அன்புமணி, “அந்த பதிவுக்கும்ம் எனக்கும் தொடர்பு இல்லை. அவர் போட்டதை நான் எப்படி கேட்க முடியும்” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு டில்லி செய்தியாளர்கள், “ உங்கள் கட்சியின் நிறுவன தலைவர்தானே அவர்? ஆகவே நீங்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அல்லது அந்த பதிவை நீக்கச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் உங்கள் வருகை குறித்து செய்தி எடுக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள்.

இதைடுத்து, அன்புமணி, “அப்பாவை மறுப்பு போடச்சொல்கிறேன் அல்லது டுவிட்டை நீக்க சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார். அதே போல் சிறிதி நேரத்தில் அந்த பதிவை பதிவை ராமதாஸ் நீக்கிவிட்டார்.