ட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டனர். ஆகவே அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்து செய்துவிட்டு நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம், டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டபிடாரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணயில் போட்டியிட்டார், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

ராஜேஷ் லக்கானி - கிருஷ்ணசாமி
ராஜேஷ் லக்கானி – கிருஷ்ணசாமி

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்த கிருஷ்ணசாமி மனு ஒன்றை அளித்தார். அதில்,
“நான் சட்டசபையில் அ.தி.மு.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாலும், மழை வெள்ளம் தொடர்பாக ஐகோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்ததாலும், கடந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் என்னை ஜெயிக்கவிடக்கூடாது என்பதில் அ.தி.மு.க.வினர் குறிவைத்திருந்தனர். அவர்களுக்கேற்ற அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் ஓட்டுகளை தேர்தல் அதிகாரிகள் வினியோகிக்கவில்லை. வாக்காளர்களுக்கு தங்கு தடையில்லாமல் அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்தனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தரராஜ், தனது சொத்துகள் பற்றிய தகவல்கள் பலவற்றை மறைத்துவிட்டார்.
தேர்தல் முடிவில் 493 ஓட்டுகள் வித்தியாசத்தில் சுந்தரராஜிடம் நான் தோற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டேன். வாக்கு எண்ணிக்கையிலும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்கு எண்ணிக்கை அன்றே புகார் கொடுத்தேன். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை.
எனவே, இதுபோன்ற பிரச்சினைகளை பரிசீலித்து பார்த்து, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ் பெற்ற வெற்றி செல்லாது என்றும், தேர்தலில் நான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும்” –  இவ்வாறு தனது மனுவில் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.