சென்னை:
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் நகரங்களில் சரக்குப் பெட்டக முனையம், தகவல் தரவு மையம் உள்ளிட்டவற்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. சென்னை அம்பத்தூரில் 2500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள NTT Global Data Centres நிறுவனத்தின் தகவல் தரவு மையத்துக்கும் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Patrikai.com official YouTube Channel