சென்னை: பொது மக்கள் இ பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பவரல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகஅரசு பொதுஊடங்கை அறிவித்துள்ளதுடன், வெளிநாடு, வெளிமாநிலம் செல்லவும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், சென்னையில் ஒரு செக்டாரை விட்டு மற்றொரு செக்டார் செல்வதற்கும்  இ பதிவு முறையை கொண்டு வந்துள்ளது. இதில் பலர் திருமணம் என ஏமாற்றி செல்வது தெரியவந்ததால், அதுகுறித்து மேலும் பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பொது மக்கள் இ பதிவு (e-registration) குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணை வெளியிட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசி நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும், இந்த தொலைபேசி எண்ணை ,  காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.