
ராஜ்கோட்,
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில், பிரபல கிரிக்கெட் வீரர் புஜா இரட்டை சதம் அடித்தார்.
இதன் காரணமாக முதல்தர போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் புஜாரா. இவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
அதையடுத்து, இந்தியாவின் முதல்தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார்.
தற்போது ரஞ்சி டிராபி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி சார்பில் புஜாரா விளையாடி வருகிறார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். இதன்மூலம் முதல்தர போட்டிகளில் 12 இரட்டை சதம் அடித்துள்ளார்.
அதன் காரணமாக முதல்தர போட்டிகளில் அதிக இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றுள்ளார்.
[youtube-feed feed=1]