சென்னை:
வீடு தேடி சென்று காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் நடமாடும் காய்கறி கடைகளை அமைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். மேலும் நியாய விலைக் கடைகள், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனையை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இஞ்சி, சின்ன வெங்காயம், பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது பற்றி ஆலோசிக்கப்பட்டது.